செய்திகள்
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இலங்கையில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு பேர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
நாடளவில் ஜனவரி மாதத்தில் மட்டும் 4,943 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அதிகபட்சமாக கம்பகா மாவட்டத்தில்தான் டெங்குவின் தாக்கம் காணப்படுவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கம்பகா மாவட்டத்தில் 764 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 674 பேரும், கொழும்பு மாநகரப் பகுதியில் 608 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலி மாவட்டத்தில் 318 பேரும், கண்டி மாவட்டத்தில் 305 பேரும், மட்டக்கிளப்பு மாவட்டத்தில் 278 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 201 பேரும் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.