செய்திகள்
ஐஐஎம், ஐஐடி முதலிய மைய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான கூட்டு நுழைவுத்தேர்வு ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜே.இ.இ. மெயின் எனப்படும் முதன்மைத் தேர்வின் இரண்டாம் கட்டத் தேர்வு, கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 9ஆம் தேதிவரை நடைபெற்றது.
இந்தத் தேர்வை சுமார் 8 இலட்சம் பேர் எழுதியிருந்தனர்.
அந்தத் தேர்வின் முடிவுகளே இன்று வெளியிடப்பட்டுள்ளன.
இதில் 24 பேர் நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.