அரசியல் உள்நோக்கத்தோடு சோதனை மேற்கொண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்களை அமலாக்கத் துறை துன்புறுத்துகிறது என்று வீட்டுவசதி, மதுவிலக்கு - ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :
”சென்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் இலஞ்ச ஒழிப்புத் துறையால் புதிவு செய்யப்பட்ட வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு திமுக ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெற்றறைப் போன்று சித்தரிப்பது அரசியல் உள்நோக்கத்தோடு கடந்த மாதம் டாஸ்மாக் நிறுவனத்தில் தலைமை அலுவலகத்தில் அலாக்கத் துறை சோதனைகளை மேற்கொண்டது.
இந்த சோதனைகளின் போது டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதற்கான எந்தவித ஆதாாமும் கிடைக்காத நிலையில் ஆயிரம் கோடி குபாய் ஊழல் நடைபெற்றதாக ஒரு கற்பனைச் செய்தியை அமலாக்கத் துறை வெளியிட்டது. நியாயப்படுத்துவதற்காக அத்துறை டாஸ்மாக் நிறுவனர்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நிறுவனத்தின் இயக்குநர்- பணியாளர்கள் சிலருடைய வீடுகளில் சோதனைகளை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது. இந்த சோதனை போதும் எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்காத நிலையில் அரக அனுவலர்களை அமலாக்கத் துறை தொடர்ந்து துன்புறுத்தியும் கட்டாயப்படுத்தியும் வருகிறது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டல்களை தொடர்ந்து மீறி இவ்வாறு அமலாக்கத் துறை மேற்கொண்டுவரும் அரசியல் பழிவாங்கள் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசின் கை எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகத் தேவையான அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அலுவலர்களுடன் தமிழ்நாடு அரக எப்போதும் துணைநிற்கும்.” என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.