செய்திகள்
டாஸ்மாக் கொள்முதல் தொடர்பாக ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என விவகாரம் கிளம்பியுள்ள நிலையில், இவ்வழக்கை தி.மு.க. அரசு வேறு மாநிலத்துக்கு ஏன் மாற்றும்படி சொன்னது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார்.
பேரவையில் இதைப் பற்றிக் கேள்வி எழுப்ப முயன்றதற்கு, அவைத்தலைவர் அப்பாவு அனுமதி மறுத்துவிட்டதாக பழனிசாமி தெரிவித்தார்.
அனுமதி மறுப்பைக் கண்டித்து வெளிநடப்பு செய்ததாக வெளியே வந்து செய்தியாளர்களிடம் அவர் கூறினார். ஆனால், டாஸ்மாக் வழக்கில் யார் அந்தத் தியாகி என பதாகையையும் சட்டைப்பையில் வில்லையை அணிந்ததையும் கண்டித்து அதை வெளியே விட்டுவிட்டு வரும்படி அப்பாவு கேட்டுக்கொண்டார். அதைக் கேட்காத 13 அ.தி.மு.க. உறுப்பினர்களை முன்னதாக அவர் இந்தத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.