டிப்ளமோ அரியர் இருந்தால் மீண்டும் எழுத அரிய வாய்ப்பு!

டிப்ளமோ அரியர் இருந்தால் மீண்டும் எழுத அரிய வாய்ப்பு!
Published on

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இறுதி ஆண்டு முடித்தும் பல்வேறு காரணங்களால் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் தங்களின் வாழ்வில் அடுத்த நிலைக்குச் செல்ல இயலாத சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, வாழ்வில் முன்னேற்றம் பெறும்வகையில் அவர்களுக்கு நிலுவைத் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு வழங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இந்த மாணவர்கள் வரும் ஏப்ரல் 2025, அக்டோபர் 2025 பருவத் தேர்வுகளின்போது, தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு (Grace Chance) வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

”பாலிடெக்னிக் கல்லூரி பயின்று பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளால் தேர்ச்சி பெறாமல் நிலுவை வைத்துள்ள பாடங்களுக்கு (Arrears)  தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு வழங்கும்படி மாணவர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. அதைப் பரீசிலித்து முதலமைச்சர் உத்தரவிட்டதன்படி, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நிலுவைப் பாடங்கள் (Arrears) தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு (Grace Chance) வழங்க உயர்கல்வித் துறை முடிவெடுத்துள்ளது.

இது குறித்த விவரங்களை https://dte.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இச்சிறப்பு வாய்ப்பினை சில பாடங்களில் தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் மாணவர்கள் பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளமாக்கி கொள்ள வேண்டும்.” என்று அமைச்சர் கோவி செழியன் கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com