தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்- மு.க.ஸ்டாலின் சாடல்!

Union Education Minister Dharmendra Pradhan and Tamil Nadu CM MK Stalin
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசம் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாகக் கூறியுள்ளார். 

இன்று நாடாளுமன்றத்தில் மைய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் தன் சமூக ஊடகப் பக்கங்களில் எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளார்.  

”தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் மோடி இதனை ஏற்கிறாரா?

NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?

பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!!

நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்!” என்று முதலமைச்சர் ஸ்டாலின் சரமாரியாகக் கேட்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com