தி வயர் முடக்கம்- முதல்வர் ஸ்டாலின் கருத்து!

தி வயர் முடக்கம்- முதல்வர் ஸ்டாலின் கருத்து!
Published on

தி வயர் இணைய ஊடகம் முடக்கப்பட்டது குறித்து பல்வேறு ஊடக, அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

சென்னைப் பத்திரிகையாளர் சங்கம்- எம்யுஜெ, சென்னைப் பத்திரிகையாளர் மன்றம் ஆகியவற்றின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா மத்திய தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சருக்கு இதுகுறித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். குறிப்பாக, பல தொலைக்காட்சிகளில் வரன்முறையின்றி போர்ப் பதற்றம் ஊட்டும் தகவல்களை ஒளிபரப்பப்படுவதைத் தடுக்காதநிலையில், தி வயர் ஊடகத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையானது கருத்து சுதந்திரத்தை அடியோடு புதைப்பதாகும் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வயர் மீதான நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினும் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தன் சமூக ஊடகப் பக்கத்தில், “ ஒரு நெருக்கடியான கட்டத்தில் ஊடகங்களை மௌனிக்கச் செய்வது ஜனநாயகத்தின் ஆன்மாவைக் குறைத்து மதிப்பிடச் செய்வதாகும். எனவே, வயர் ஊடகத்தின் மீதான தடையை மைய அரசு மறுபரிசீலனை செய்து, நீக்கும் என நம்புகிறேன். உலகின் மிகப்பெரிய நாடான இந்தியாவில் பத்திரிகைச் சுதந்திரம் நசுக்கப்பட்டுவிடக் கூடாது.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.   

logo
Andhimazhai
www.andhimazhai.com