தி.மு.க. மா.செ.கள் காணொலிக் கூட்டம்
செய்திகள்
தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்காக இணையவழிக் கூட்டம்!
சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்புக்கு இடையே தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை இயக்கம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காணொலிவழிக் கூட்டம் நடைபெறுகிறது.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் சற்றுமுன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
ஓரணியில் தமிழ்நாடு என்கிற பெயரில் தி.மு.க. பெருமளவில் உறுப்பினர்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பும் முன்னரே வெளியிடப்பட்டிருந்தது.
நாளை மாலை 6 மணியளவில் நடைபெறும் காணொலிக் கூட்டத்தில், மாவட்டச்செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிகளின் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.