சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடங்கியநிலையில் தி.மு.க.வில் மாவட்டச்செயலாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை தெற்கு மா.செ.வாக இருந்துவரும் அண்ணாதுரைக்குப் பதிலாக, பட்டுக்கோட்டை, ஆலடிக்குமுலை பழனிவேல் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டச்செயலாளர் முபாரக்கும் விடுவிக்கப்பட்டு, கே.எம்.இராஜு அவருக்குப் பதிலாக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் கிழக்கு மா.செ. டி.ஜெ.எஸ்.கோவிந்தராஜன் விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக வல்லூர் இரமேஷ்ராஜ் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மத்திய மாவட்டப் பொறுப்பாளர் பதவியில் டி.பி.எம். மைதீன்கானுக்குப் பதிலாக அப்துல் வகாப் நியமிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க.வின் ஈரோடு, திருப்பூர், மதுரை, விழுப்புரம் மாவட்ட அமைப்புகள் பிரிக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஈரோடு தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக அமைச்சர் முத்துசாமியும், வடக்குக்கு என்.நல்லசிவம், மத்திய மாவட்டத்துக்கு தோப்பு வெங்கடாச்சலமும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் கிழக்கு க.செல்வராஜ், மேற்கு அமைச்சர் சாமிநாதன், வடக்கு என்.தினேஷ்குமார், தெற்கு இல.பத்மநாபன் என மாவட்டப்ப்பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் வடக்கு செஞ்சி மஸ்தான், தெற்கு கௌதம சிகாமணி, மத்தி ஆர். இலட்சுமணன் ஆகியோரும்,
மதுரை வடக்கு அமைச்சர் மூர்த்தி, மதுரை மாநகர் கோ தளபதி என மாவட்டப்பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.