செய்திகள்
காஷ்மீர் பெகல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டுடனான அரசரீதியான உறவுகளை முறிக்க ஒன்றிய அரசு முடிவுசெய்தது. அதன்படி நாட்டில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகள், குடிமக்கள் அனைவரும் நாளைக்குள் வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக தலைநகர் தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
பாகி. தூதரகத்தைச் சுற்றிலும் போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை இன்று காலையில் தில்லி காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் அகற்றத் தொடங்கினர்.