உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற்றுவரும் கும்பமேளாவில் நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, 10 பேர் உயிரிழந்தனர் என்று அஞ்சபட்ட நிலையில் இந்தத் துயரமான தகவல் கிடைத்துள்ளது.
ஆனாலும் பல மாநிலங்களிலிருந்தும் கும்பமேளாவுக்காக பிரயாக்ராஜ் எனப்படும் அயோத்தியை நோக்கி வடமாநிலத்தவர் சென்றவண்ணம் உள்ளனர்.
மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து அயோத்திக்குச் செல்ல முயன்ற ஒரு கூட்டத்தினர், இந்தூரில் உள்ள தொடர்வண்டி நிலையத்தில் நேற்று மேற்கொண்டு யாருக்கும் உட்கார இடமில்லாததால் கதவை உள்ளிருந்த பயணிகள் பூட்டிக்கொண்டனர். இதனால் அதில் ஏறத் தயாராக இருந்த கும்பமேளா பயணிகள் கற்களை எடுத்து சன்னல்கள் மீது வீசி களேபரத்தை உண்டுபண்ணினார்கள்.
காவல்துறையினர் வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கும்பமேளாவில் பக்தர்கள் குவிந்துவரும் நிலையில் இப்படியொரு அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.
மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.