“இன்றைய நம் திராவிட மாடல் ஆட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே வலுவான கொள்கை அடித்தளம் அமைத்தவர் சர் பிட்டி தியாகராயர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான சர் பிட்டி தியாகராயர் பிறந்த நாள் இன்று. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில்: “கல்விக்கூடங்கள், தெருவிளக்குகள், குடிநீர் இணைப்பு, மதிய உணவுத் திட்டம் எனச் சென்னை மாநகரின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர்.
நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராக இருந்து, தன்னைத் தேடி வந்த முதலமைச்சர் பொறுப்பை மறுத்த மாண்பாளராக உயர்ந்தவர்.
எவருக்காகவும் தன் இயல்பை மாற்றிக்கொள்ளாத 'வெள்ளுடை வேந்தர்' எனப் பெயரும் பெற்றவர்.
இன்றைய நம் திராவிட மாடல் ஆட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே வலுவான கொள்கை அடித்தளம் அமைத்த எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம்!” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.