செய்திகள்
குஜராத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் மைய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் உடல்நலம் குறித்து அவரின் மகன் கார்த்தியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் விசாரித்தார்.
முன்னதாக, இதுகுறித்து கார்த்தி தன் சமூக ஊடகப் பக்கங்களில் தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கார்த்தி சிதம்பரத்திடம் அவரின் தந்தையின் உடல்நிலை குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார்.