செய்திகள்
பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும் முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பிரமுகருமான கவிஞர் நந்தலாலா பெங்களூரில் சற்றுமுன் காலமானார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா தெரிவித்துள்ளார்.
இறுதிநிகழ்வு பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என த.மு.எ.க.ச. மாநிலக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.