‘பயங்கரவாதிகளுக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை’ - பிரதமர் மோடி ஆவேசம்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தப்ப முடியாது என்றும் அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பீகார் மாநிலம் மதுபானி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதிகளையும், அவர்களின் ஆதரவாளர்களையும், சதிகாரர்களையும் அடையாளம் கண்டு தண்டிக்கும். அவர்கள் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் விட மாட்டோம். தாக்குதல் நடத்தியவர்கள், சதி செய்தவர்களுக்கு கற்பனை செய்ய முடியாத அளவு தண்டனை வழங்கப்படும். இந்தியாவின் தன்னம்பிக்கையை யாராலும் அசைக்க முடியாது. பயங்கரவாதிகளை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவோம்." என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com