காஷ்மீர் விவகாரத்தை முன்னிட்டு பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய சிவில் விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் பல விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஏர் இந்தியா நிறுவனம் உத்தேச இழப்பை அரசு நிதியுதவி தந்து ஈடுகட்ட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் கொடி கட்டிய எந்தக் கப்பலும் இந்தியத் துறைமுகங்களில் நுழையக்கூடாது என மத்திய அரசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.
பெகல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தான் அரசின் பின்னணி இருப்பதாகக் குற்றஞ்சாட்டி, அந்நாட்டினர் யாரும் இங்கு தங்கக்கூடாது என கடந்த மாதம் 29ஆம் தேதிவரை அனைத்து விசாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இதையொட்டி இரு நாடுகளுக்கு இடையிலும் மாறிமாறி தடை அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
போர்ச் சூழலும் தோன்றியுள்ளதை ஐ.நா. சபை உட்பட்ட அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.