பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!

நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி
நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி
Published on

சென்னை தியாகராய நகரில் உள்ள அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரி இன்று பாஜகவில் இணைந்தார்.

நடிகை கஸ்தூரி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1991ஆம் ஆண்டு இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் 'ஆத்தா உன் கோயிலிலே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு கருத்துகளை குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். பல்வேறு விவாத நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பேசி வந்தார்.

சென்னையில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் ஒன்றில் தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்த நிலையில் பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். அதேபோல், திருநங்கையான பிக்பாஸ் புகழ் நமிதா மாரிமுத்துவும் இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com