செய்திகள்
பா.ம.க. சார்பில் ஆண்டுதோறும் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும். அத்துடன் வேளாண் நிதிநிலை அறிக்கையும் வெளியிடப்பட்டுவருகிறது. அக்கட்சியின் 18ஆவது நிழல் வேளாண் நிதிநிலை அறிக்கையை கட்சித் தலைவர் அன்புமணி சென்னையில் இன்று வெளியிட்டார்.
விவசாயி தோற்றத்தைப் போல பச்சைக் கரை வேட்டியுடனும் துண்டுடனும் அவர் இன்று காட்சியளித்தார்.
நிகழ்ச்சியில் பா.ம.க. நிருவாகிகள் திலகபாமா, வடிவேல் இராவணன், முன்னாள் மைய அமைச்சர் மூர்த்தி, பசுமைத் தாயகம் அருள் ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
மொத்தம் 52 பக்கங்களில் 240 குறிப்புகள் அடங்கியதாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் என 115 குறிப்புகளும் தனியாக வெளியிடப்பட்டுள்ளன.