பி.சி., எம்.பி.சி. கல்வி உதவித்தொகை காலக்கெடு நீட்டிப்பு!

government college
அரசு கல்லூரி
Published on

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நல மாணவர்களுக்கான 2024-2025 ஆம் ஆண்டு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

https://umis.tn.gov.in (Integration with USS Portal) என்ற இணையதளத்தில் 28.02.2025 வரை கெடு வைத்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

இந்நிலையில், மாணவ / மாணவியர்களின் நலன் கருதியும், கல்வி உதவித்தொகை பெறத் தகுதியுள்ள ஒரு மாணவர்கூட விடுபடக்கூடாது என்ற நோக்கத்தோடும் 2024-2025 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் 15.03.2025 வரை நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. 

அனைத்து கல்வி நிலைய முதல்வர்களும், கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட விபரத்தினை மாணவர்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com