செய்திகள்
பிபிசி தமிழோசை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளரும் தயாரிப்பாளருமான ஆனந்தி அக்கா என்கிற ஆனந்தி சூரிய பிரகாசம் பிரிட்டனில் காலமானார்.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், பிபிசி தமிழோசை வானொலியில் இணைந்துகொண்ட முதல் தமிழ்ப் பெண் ஆவார்.
அறிவிப்பாளர், செய்தியாளர், தயாரிப்பாளர் என பல நிலைகளைக் கண்ட ஆனந்தி சூரிய பிரகாசம் அதன் இயக்குநர்களில் ஒருவராகவும் பதவியேற்று ஓய்வு பெற்றார்.
பின்னர் இலண்டனில் வசித்து வந்த இவர் தன்னுடைய எண்பத்தி மூன்றாம் வயதில் நேற்று காலமானார்.
அவருடைய இறுதி நிகழ்வுகள் குறித்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர்.