இன்று காலைதிறக்கப்படவிருந்த நெடுஞ்சாலைத்துறையின் சுங்கச்சாவடியை விவசாயிகள் உட்பட்ட பொதுமக்கள் அடித்து நொறுக்கினார்கள்.
இந்த சம்பவம்திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
திண்டுக்கல்லுக்கும் குமுளிக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலையில் வத்தலக்குண்டு அருகில் புதியதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் நான்கு வழிச் சாலை அமைப்பதாகக் கூறித்தான் இந்தச் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது.
ஆனால் இருவழிச் சாலை மட்டுமே உள்ள நிலையில், சுங்கச்சாவடி கூடாது என சுங்கச்சாவடி அமைந்துள்ள இலட்சுமிபுரம் சுற்றுவட்டார மக்கள் எதிர்ப்புதெரிவித்தபடி இருந்தனர்.
அதையும் மீறி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், இலட்சுமிபுரம் வட்டார பெண்கள் உட்பட விவசாயிகள், பல தரப்பு தொழில்களைச் செய்பவர்கள் சுங்கச்சாவடி மீது கற்கள், நாற்காலிகள் போன்றவற்றை வீசு உடைத்துநொறுக்கினர்.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.