பெரியாரை இழிவுபடுத்துவதா?- அண்ணா சமாதியில் வைகோ ஆவேசம்!

vaiko
Published on

பெரியாரைப் பற்றி சீமான் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் நிலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அதைப் பற்றி இன்று பேசினார். 

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 59ஆவது நினைவுநாளை முன்னிட்டு, சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள அவரின் சமாதிக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் மரியாதை செலுத்தினர். 

ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தன் கட்சி நிர்வாகிகளுடன் வந்து மலர் மரியாதை செலுத்தினார். 

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ பெரியாரைப் பற்றி இவ்வளவு காலம் யாரும் இழிவாகப் பேசியதில்லை. நாங்கள் அமைதியாக இருக்கிறோம். காரணம், எந்த வன்முறையும் கூடாது என்பதுதான். இளைஞர்கள் இப்போது பெரியாரைப் பற்றி நிறைய படிக்கிறார்கள், தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.” என்று குறிப்பிட்டார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com