பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2ஆயிரம் ரூபாயை வழங்கக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பா.ஜ.க. வழக்குரைஞர் மோகன்தாஸ் என்பவர் சார்பில் பொதுநலன் மனுவாகத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “மழை வெள்ளத்தால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும் துயரில் உள்ளனர். எனவே, பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட கடந்த ஆண்டைப் போல, இந்த ஆண்டும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.2000 வழங்க உத்தரவிட வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி ஸ்ரீராம் அமர்வில், வழக்க்குரைஞர் ஜி.எஸ்.மணி இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம், நாங்கள் ஏற்கெனவே நிராகரித்த பிறகும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு கூறுவதை ஏற்கமுடியாது; தொடர்ந்து இப்படி முறையிட்டால் மனுதாரருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும்; இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டார்.