அண்மையில் மறைந்த கத்தோலிக்க தலைமை குரு போப் பிரான்சிஸ் இறுதி நிகழ்வு இன்று நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இந்தியாவிலிருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ரோம் நகரில் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்திய அரசின் சார்பில் குடியரசுத்தலைவர் முர்மு, மைய அமைச்சர் ரிஜிஜு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் நாசர், திருச்சி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் வாட்டிகனுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
”முதலமைச்சர் உத்தரவினை ஏற்று, அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ். இருதயராஜ் ஆகிய இருவரும் ரோம் நகர் சென்று வாடிகனில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் திருத்தந்தை போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.” என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.