செய்திகள்
திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போப் பிரான்சிசுக்கு இப்போது உடல்நிலை சற்றுதேறியுள்ளது.
கத்தோலிக்க மத பீடத் தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த 6ஆம் தேதியன்று மூச்சு விடுவதில் சிரமம் அடைந்தார். அதனால் இத்தாலி ரோம் நகரில் உள்ள கேமெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
88 வயதான பிரான்சிஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குடலிறக்க அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். அதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்னரும் அதே மருத்துவமனையில் இதே பிரச்சினைக்காக சிகிச்சை பெற்றார். உடல்நிலை ஒத்துழைக்கும் என உறுதியான பிறகு அறுவை மேற்கொள்ளப்பட்டது.
மீண்டும் கேமெல்லி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள அவர், மெல்ல மெல்ல தேறிவருகிறார் என்று வாட்டிகன் தரப்பு தெரிவித்துள்ளது.