போலீஸ் கொலையில் தேடப்பட்ட கஞ்சா வியாபாரி சுட்டுக் கொலை!

போலீஸ் கொலையில் தேடப்பட்ட கஞ்சா வியாபாரி சுட்டுக் கொலை!
Published on

மதுரை மாவட்டத்தில் மது குடிக்கச் சென்ற காவல்துறையில் பணியாற்றிய முத்துக்குமார் அங்கு ஏற்பட்ட பிரச்னையில் கல்லால் அடித்துக்கொல்லப்பட்டார். 

உசிலம்பட்டி கள்ளபட்டியைச் சேர்ந்த இவர், காவல் ஆய்வாளரிடம் ஓட்டுநராகப் பணியாற்றியவர். கடந்த 27ஆம் தேதி பணியை முடித்துவிட்டு முத்தையன்பட்டியில் அரசு மதுக்கடையில் குடித்தார். அப்போது கஞ்சா விற்பனையாளர் பொன்வண்ணனிடம் ஏதோ கூறியுள்ளார். 

அதன்பிறகு தன் ஊரைச் சேர்ந்த ராஜாரமுடன் அங்குள்ள தோட்டத்துக்குச் சென்றார். அப்போது பின்னால் வந்த சிலர் கல்லால் கடுமையாகத் தாக்கியதில், தலையில் படுகாயம் அடைந்து அங்கேயே முத்துக்குமார் இறந்துபோனார். 

இராஜாராமுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது பொன்வண்ணன்தான் என்பது தெரியவந்ததும், அவரை காவல்துறையினர் தேடிவந்தனர். 

இந்நிலையில், தேனி மாவட்டம் கம்பம் வனப் பகுதியில் வைத்து பொன்வண்ணனைப் பிடிக்கமுயன்றதாகவும் அப்போது மோதல் கொலை செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் முதல் கட்டத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com