மக்களுக்கும் மாநில அரசுக்கும் வெற்றி- முதல்வர் ஸ்டாலின்

CM M.K.Stalin
முதல்வர் ஸ்டாலின்
Published on

டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் சமூக ஊடகப் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.  

அதில், “ நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்!

சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்! மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது!

இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.வும் துணைபோகக் கூடாது!” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com