செய்திகள்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.
சென்னையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை நோக்கி தனியார் பேருந்து ஒன்று நேற்று இரவு சென்றது. அந்தப் பேருந்து மணப்பாறையை அடுத்த யாகபுரம் எனும் இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
தறிகெட்டு ஓடிய பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அத்துடன் பேருந்து தீ பிடித்துக்கொண்டதால் உள்ளே இருந்த பயணிகள் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு செய்வதறியாது அலறினர்.
ஆனாலும் பேருந்தின் ஆபத்து உதவி கண்ணாடிச் சன்னல்களை உடைத்துவிட்டு வெளியே தப்பினர்.
ஆனாலும் இந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.