மன்னிப்பு கேட்டார் அமைச்சர் பொன்முடி!

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி
Published on

சர்ச்சைக்கு உரிய பேச்சுக்காக அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். 

தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நேற்று நீக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி தன் சர்ச்சைக்குரிய தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.

மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று பொன்முடி கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com