மாணவன் மின்விபத்தால் மரணம்- தலைமையாசிரியர், ஆசிரியர் பணியிடைநீக்கம்!

பொய்யாவயல் மாணவன் சக்தி சோமையா
பொய்யாவயல் மாணவன் சக்தி சோமையா
Published on

சிவகங்கை மாவட்டத்தில் பொய்யாவயல் கிராமத்தில் பள்ளியில் மின்சாரம் தாக்கியதில் மாணவன் ஒருவன் உயிரிழந்தான். இதில் உரியபடி செயல்படாத காரணத்துக்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன், ஆசிரியர் பாண்டிஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காரைக்குடி வட்டம், பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவந்த சக்தி சோமையா நேற்று பள்ளியின் மின்சார வயர்களில் ஏற்பட்ட மின்சாரக் கசிவால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளதுடன், மாணவனின் குடும்பத்தினருக்கு 5 இலட்சம் ரூபாய் பொது நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். 

இதனிடையே, மாணவனின் சாவுக்கு நீதி கேட்டு ஊர் மக்கள் போராட்டம் நடத்தியநிலையில், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com