மீண்டும் இலங்கை துப்பாக்கிச்சூடு- 2 மீனவர்கள் காயம்!

Tamilnadu fishers arrested
தமிழக மீனவர்கள் கைது
Published on

புதுச்சேரியின் காரைக்கால் படகில் கடலுக்குள் மீன்பிடிக்குச் சென்ற மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கியால் நேற்று சுட்டு அட்டூழியம் செய்துள்ளது. இதில் தமிழகத்து மீனவர்கள் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இதனால் நாகை, காரைக்கால் மீனவர்கள் கவலையும் வேதனையும் அடைந்துள்ளனர். 

காரைக்கால் மேட்டைச் சேர்ந்த ஆனந்தவேலின் படகில், கிளிஞ்சல்மேட்டின் மாணிக்கவேல், தினேஷ், கார்த்திகேசன், செந்தமிழ், திருப்பட்டினம் மைவிழிநாதன், வெற்றிவேல், மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி நாவெந்து, வானகிரி இராஜேந்திரன், இராம்கி, நாகை மாவட்டம் நம்பியார் நகர் சசிகுமார், நந்தகுமார், பாபு, குமரன் என 13 பேர் கடந்த 26ஆம் தேதி கடலுக்குள் சென்றனர்.

திங்கள் நள்ளிரவு அவர்கள் மீன்பிடியில் இருந்தபோது அப்படகில் இருந்தவர்களை நோக்கி இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். அதில் உயிருக்கு பயந்து தண்ணீருக்குள் குதித்து தப்பமுயன்ற இருவரையும் இலங்கைப் படை கைதுசெய்தது.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பாபு, செந்தமிழ் இருவருக்கும் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com