மீண்டும் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி- உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகள்!

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி
Published on

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவிக்கு மீண்டும் ஆபத்து வருமோ என நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார், அமைச்சர் செந்தில் பாலாஜி. மாநிலத்தை ஆளும் தி.மு.க.வுக்கு கடும் சங்கடத்தை ஏற்படுத்தியபோதும், அவர் 471 நாள்கள் சிறையிலிருந்து வெளியே வந்தார். 

இடையில் பறிக்கப்பட்ட அமைச்சர் பதவி அவருக்கு மீண்டும் வழங்கப்பட்டது. அவருக்குப் பதவி தரப்பட்டதையொட்டியே உதயநிதியின் துணைமுதலமைச்சர் பதவி உயர்வும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 

இவ்வளவு செல்வாக்கு மிக்க பாலாஜியின் மீதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், இன்று அவருடைய ஜாமின் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, நீதிபதிகள், செந்தில்பாலாஜி அமைச்சராகத் தொடரவேண்டுமா எனக் கேட்டனர். 

அரசு சாட்சிகள் நிறைய பேர் இருப்பதால் அமைச்சர் பதவியில் தொடர்வதை அவர் விரும்புகிறாரா என்று அவர்கள் கேட்டனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com