இந்தியா - பாகி. போர் குறித்து என்ன பேசினார் புதிய போப்?

போப் லியோ
போப் லியோ
Published on

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தை வரவேற்பதாகவும் உக்ரைன், காசாவில் அமைதி நிலவ வேண்டும் எனவும் போப் லியோ கூறியுள்ளார்.

ரோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய போப் லியோ, ”மூன்றாம் உலகப்போர் துண்டு துண்டாக நடத்தப்படும் இந்த வியத்தகு சூழலில், உலகத் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுகிறேன் மீண்டும் ஒருபோதும் போர் வேண்டாம்.

உக்ரைனில் உண்மையான நீடித்த அமைதியை ஏற்படுத்த வேண்டும். அதேபோல், காசாவில் போர் நிறுத்த வேண்டும். காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமானத்துடன் உதவி செய்ய வேண்டும்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன். பேச்சுவார்த்தைகள் மூலம் நாம் ஒரு நீடித்த உடன்பாட்டை எட்ட முடியும் என்று நம்புகிறேன்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com