செய்திகள்
முதலமைச்சர் ஸ்டாலினை உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் சந்தித்துப் பேசினார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
நாளை நடைபெறும் மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மாநாட்டை முன்முயற்சி எடுத்து செய்வதற்காக முதலமைச்சருக்கு நெடுமாறன் பாராட்டு தெரிவித்தார்.
அப்போது, அண்மையில் அரசு வெளியிட்ட தமிழரின் நிருவாகம் - தொன்மையும் தொடர்ச்சியும் நூலை நெடுமாறனுக்கு முதலமைச்சர் பரிசாக வழங்கினார்.