மதுரையில் பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ள முருகன் மாநாட்டை குஜராத்தில் நடத்துவார்களா என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேட்டுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ மத்திய அமைச்சர் அமித்ஷா மதுரையில் வந்து முருகன் மாநாடு நடத்துகிறார். முருகன் மாநாட்டை குஜராத்தில் நடத்துவார்களா?” என்றார்.
”இவர் குஜராத் மக்களிடம் போய் முருகன் என்கிற கடவுள் இருக்கிறார் என்று சொல்வாரா? உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க.வால் முருகன் மாநாடு நடத்தமுடியுமா? தமிழ் மக்களுக்கு மட்டும்தான் முருகன் கடவுளா? வட மாநிலங்களுக்குக் கடவுள் இல்லையா? விநாயகர் எங்களுக்குக் கடவுள். நாங்க இந்து. முருகன், விநாயகரை ஏற்றுக்கொள்கிறோம். நீங்க குஜராத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் போய் முருகன் மாநாடு நடத்தவேண்டியதுதானே?” என்றும் செல்வப்பெருந்தகை சரமாரியாகக் கேள்விகளை அடுக்கினார்.