விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ / மாணவியருக்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகின்ற 07.05.2025 அன்று காலை 7.00 மணியளவில் ஆண்களுக்கும், 08.05.2025 அன்று காலை 7.00 மணியளவில் பெண்களுக்கும் கீழ்காணும் விபரப்படி நடைபெற இருப்பதால் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான தகவல்கள் குறுச்செய்தி, வாட்ஸ்ஆப் மூலமாக உரியவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
முன்னதாக, இவ்விடுதிச் சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம் 18.04.2025 அன்று www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது, விருப்பமுள்ள 7-ஆம், 8-ஆம், 9-ஆம் மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவு ஏற்றம் செய்வதற்கான கடைசி நாள்: 05.05.2025 அன்று மாலை 5.00 மணி ஆகும்.
தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைப்பேசியினை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரத்தினை பெற்று கொள்ளலாம்.
விளையாட்டு விடுதி - மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
விளையாட்டு
மாவட்ட அளவிலான தேர்வுகள் நடைபெறும் இடம், தேதி மற்றும் நேரம்
1. தடகளம் (Athletics)
இடம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அந்தந்த மாவட்ட விளையாட்டரங்கம்
தேதி மற்றும் நேரம்
ஆண்கள் 07.05.2025
காலை 7.00 மணி
பெண்கள் 08.05.2025
காலை 7.00 மணி
- Boys & Girls
2. கூடைப்பந்து (Basketball)
- Boys & Girls
3. கால்பந்து (Football)
- Boys & Girls
4. வளைகோல்பந்து (Hockey)
- Boys & Girls
5. கபாடி (Kabaddi)
- Boys & Girls
6. கையுந்துபந்து (Volleyball)
- Boys & Girls
7. கிரிக்கெட் (Cricket)
- Boys only
மாவட்ட அளவிலான தேர்வில் தெரிவுசெய்யப்பட்டவர்கள் மாநில அளவிலான தேர்வுக்கு தகுதி பெறுவர். அதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
கீழ்காணும் விளையாட்டுக்கு நேரடியாக மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் 12.05.2025 அன்று கீழ்காணும் விபரப்படி நடைபெறும்
வ. எண்.
விளையாட்டு
நேரடி மாநில அளவிலான
தேர்வுகள் நடைபெறும் இடம்
மாநில அளவிலான தேர்வுகள் நடைபெறும் நாள் மற்றும் நேரம்
1.
வாள்விளையாட்டு (ஆ) & (பெ)
Fencing (Boys & Girls)
ஜுடோ (ஆ) & (பெ)
Judo (Boys & Girls)
குத்துச்சண்டை (ஆ)
Boxing (Boys)
ஜவஹர்லால் நேரு,
விளையாட்டரங்கம், சென்னை
12.05,2025
காலை 7.00 மணி
2.
பளுதூக்குதல் (ஆ) & (பெ)
Weightlifting (Boys & Girls)
வுஷு (ஆ)
Wushu (Boys)
அன்னை சத்யா விளையாட்டரங்கம், தஞ்சாவூர்
12.05,2025
காலை 7.00 மணி
3.
நீச்சல் (ஆ) & (பெ)
Swimming (Boys & Girls)
AGB Complex, வேளச்சேரி, சென்னை
12.05,2025
காலை 7.00 மணி
4.
குத்துச்சண்டை (பெ)
Boxing (Girls)
ஸ்குவாஷ் (ஆ)
Squash (Boys)
ஜவஹர்லால் நேரு,
உள் விளையாட்டரங்கம், சென்னை
12.05,2025
காலை 7.00 மணி
5.
கைபந்து (ஆ) & (பெ),
Handball (Boys & Girls)
அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி
12.05,2025
ஆண்கள்
காலை 7.00 மணி
13.05,2025
பெண்கள்
காலை 7.00 மணி
6.
மல்யுத்தம் (ஆ)
Wrestling (Boys)
டேக்வாண்டோ (ஆ) & (பெ),
Taekwondo (Boys & Girls)
மாவட்ட விளையாட்டரங்கம், கடலூர்
12.05,2025
காலை 7.00 மணி
7.
மல்லர்கம்பம் (ஆ)
Mallakhamb (Boys)
மாவட்ட விளையாட்டரங்கம், விழுப்புரம்
12.05,2025
காலை 7.00 மணி
விளையாட்டுத் தகுதிகள்: -
தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாவட்ட, மாநில அளவில் குடியரசு / பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் / அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் (அல்லது) தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் / இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு (SGFI) / இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டவர்களும், பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் பதங்கங்கள் பெற்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள், மாநில, மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதிபடைத்தவர்கள் ஆவர்.