மேல்பாதி கோயிலில் பட்டியல் மக்கள் வழிபாடு- எதிர்த்து பெண்கள் பிரச்னை!

மேல்பாதி கோயிலில் பட்டியல் மக்கள் வழிபாடு- எதிர்த்து பெண்கள் பிரச்னை!
Published on

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியல் சாதி மக்களை வழிபட விடாமல் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் தடுத்துவந்தது. இதைக் கண்டித்து பல்வேறு சமூக அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன. பிரச்னை நீதிமன்றம்வரை சென்றது. 

உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட உத்தரவின்படி பட்டியல் சமூகத்தினர் கோயிலில் வழிபடுவதை யாரும் தடுத்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதன்படி, இன்று மேல்பாதி கோயிலில் பட்டியல் சமூகத்தினர் வழிபடச் சென்றனர். இதையொட்டி 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். 

வழிபாட்டுக்குச் சென்றபோது அங்கிருந்த பட்டியல் சாதியல்லாத பிற சாதியினர் குறிப்பாக பல பெண்கள் சாதிய ஆணவத்தோடு பேசினார்கள். அவர்களின் வார்த்தைகளும் செயல்பாடும் தடிக்கவே, காவல்துறை அதிகாரி ஒருவர் கடுமையாகப் பேசி அவர்களை விரட்டினார். 

பின்னர், அவர்களை நீதிமன்ற உத்தரவை மீறுவதாக சிறையில் அடைப்பதாகச் சொன்னதும் அவர்களின் உறவினர்களான ஆண்கள் ஓடிவந்து காவல் அதிகாரிகளிடம் சமாதானம் செய்தனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com