மைத்ரேயனுக்கு அதிமுகவில் அமைப்பு செயலர் பொறுப்பு!

மைத்ரேயன் - எடப்பாடி பழனிசாமி
மைத்ரேயன் - எடப்பாடி பழனிசாமி
Published on

பாஜகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்பி மைத்ரேயனுக்கு அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கியுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயாளலர் எடப்பாடி பழனிசாமி.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில், செ.ம.வேலுசாமி (முன்னாள் அமைச்சர், கோவை), முல்லை வேந்தன் ( முன்னாள் அமைச்சர், தருமபுரி), வி.மைத்ரேயன் (முன்னாள் எம்.பி. தென்சென்னை தெற்கு(கிழக்கு) மாவட்டம்), ஆர். சின்னசாமி (முன்னாள் எம்.பி., சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி, கோவை மாநகர் மாவட்டம்) ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

தொண்டர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com