மொழிப் போர்த் தியாகிகளுக்கு மூலக்கொத்தளத்தில் வைகோ அஞ்சலி!

Vaiko
வைகோ
Published on

தமிழ் மொழி காக்க தங்களது இன்னுயிரைத் தந்த தியாகிகளை நினைவு கூரும் வகையில், ம.தி.மு.க. சார்பில் ஜனவரி 25 அன்று வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, காலை 9 மணிக்கு மூலக்கொத்தளம் இடுகாட்டில் அமைந்துள்ள தாலமுத்து, நடராசன், தருமாம்பாள் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்துகிறார். 

மாலை 5 மணியில் சென்னை, விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள மொழிப்போர்த் தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். 

மாலை 6 மணிக்கு சென்னை, சைதாபேட்டை, ஜாபர்கான்பேட்டை, கெங்கையம்மன் கோவில் தெரு - பிள்ளையார் கோவில் தெரு சந்திப்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.      

ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ திருச்சியில் ஜனவரி 25இல் சனியன்று உழவர் சந்தை மைதானத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு, மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க ஊர்வலம் நடைபெறுகிறது.

அதில் முதன்மைச் செயலாளரும் திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ அவர்களின் தலைமையில் தொடங்கி, மொழிப்போர் தியாகிகள் கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோர் நினைவிடங்களில் புகழ்வணக்கம் செலுத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு, பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துரை வைகோ பேசுகிறார் என்று ம.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com