தே.மு.தி.க.வின் இளைஞர் அணிச் செயலாளர் பதவியில் அக்கட்சியின் நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனை நியமித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஏற்கெனவே அப்பதவியில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி இதனால் கோபமடைந்து கட்சியைவிட்டு விலகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
ஆனால், அப்படி விலகவில்லை என்றும் கட்சியில் தொடர்ந்து இருப்பேன் என்றும் கூறி நல்லதம்பி காணொலி விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கட்சியின் உயர்மட்டக் குழுவிலிருந்து தன்னை நீக்கிவிடுமாறுதான் தலைமையிடம் தான் கோரிக்கை வைத்ததாகவும் அப்படி விடுவிக்காவிட்டால் அந்தப் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக மட்டும்தான் கடிதத்தில் குறிப்பிட்டதாக அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
வாரிசு அரசியல் என தி.மு.க.வை விமர்சிக்கும் விஜயகாந்த் கட்சியில் முழுக்க அவருடைய குடும்பத்தினரே முக்கிய பதவிகளில் உட்கார்ந்துவிட்டார்கள் என இணையத்தில் பரவலாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதையடுத்து நல்லதம்பியின் விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.