செய்திகள்
வி.சி.க.விலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் நடிகர் விஜய்யின் த.வெ.க.வில் இன்று சேர்ந்தார். அவருக்கு அங்கு தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இவர், அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து செயல்படுவார் என்று விஜய் அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் நேற்றுவரை ஐ.டி. அணி நிர்வாகியாக இருந்த சி.டி.ஆர். நிர்மல்குமார், த.வெ.க.வின் ஐ.டி. அணி துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
த.வெ.க. கொள்கைப் பரப்புச் செயலாளராக தொலைக்காட்சி பிரபலம் ராஜ்மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுடன் சேர்த்து புதிதாக 19 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.