தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என த.வெ.க. தலைவர் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உலக உழைக்கும் மகளிர் நாள் இன்று அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் ஒரு வாழ்த்துக் காணொலியை தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில்தான் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சிரித்தபடியே பேசிய அவர், சட்டென இறுக்கமான முகத்துடன், ”சந்தோசம்தானே... பாதுகாப்பாக இருந்தாத்தானே சந்தோசத்தை உணரமுடியும்? அப்படி எந்தப் பாதுகாப்பும் இல்லாதப்போ, பாதுகாப்பின்மையா இருக்கிறப்போ எந்த சந்தோசமும் இருக்காதுதானே அப்பிடினு நீங்க நெனைக்கிறது புரியுது. என்ன செய்ய? நீங்க, நாம எல்லாருமா சேந்துதான் இந்த தி.மு.க. ஆட்சியைத் தேர்ந்தெடுத்தோம். ஆனா அவங்க இப்படி ஏமாத்துவாங்கனு இப்பதானே தெரியுது. எல்லாமே இங்க மாறக்கூடியதுதானே? மகளிர்க்கான பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறிய இவங்கள 2026 தேர்தல்ல மாத்துவோம்!” என்று கூறினார்.