விளம்பர சர்ச்சை உணவு அதிகாரி சென்னையிலிருந்து மாற்றம்!

விளம்பர சர்ச்சை உணவு அதிகாரி சென்னையிலிருந்து மாற்றம்!
Published on

சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்துவரும் சதீஷ்குமார் ஆங்காங்கே அதிரடி சோதனை நடத்தி ஊடகங்களில் பிரபலமானவர். இவருடைய நடவடிக்கைகளில் சரியான காரணம் இருந்தபோதும், குறிப்பிட்ட தரப்பினரிடமே இவர் ஆய்வுகளில் ஈடுபடுகிறார் என்றும் பல தரப்பினரையும் கண்டுகொள்ளாமல் விளம்பரத்துக்காகவே செய்கிறார் என்றும் தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளன. 

அண்மையில், தர்பூசணியில் ஊசி போட்டு சிவப்பாக்குகிறார்கள் என இவர் கிளப்பிவிட்ட வதந்தியால் தர்பூசணி விற்பனையே படுத்துவிட்டது என பா.ம.க. போன்ற கட்சிகளும் விவசாயிகளும் கவலையை வெளிப்படுத்தினர். அரசுக்கும் இதைப் பற்றிய தெளிவை உண்டாக்குமாறு கோரிக்கை விடுத்தனர். 

அதையடுத்து, இந்த அதிகாரி, தான் எல்லாரையும் அப்படிச் சொல்லவில்லை என்று விளக்கம் அளித்தார். ஆனால் அவருடைய அதிரடி சோதனை அளவுக்கு இந்தச் செய்தி பரவலாகப் போய்ச்சேரவில்லை. 

இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் பிரபல உணவகம் ஒன்றில் இவர் சோதனைக்காகச் சென்றநிலையில், திடீரென அங்கிருந்து பின்வாங்கினார். 

அவருக்கு ஏற்பட்ட திடீர் மயக்கமே காரணம் எனக் கூறப்பட்டது. 

இந்தப் பின்னணியில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டு, சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர் வகித்துவந்த பதவியை திருவள்ளூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com