பா.ஜ.க.விலிருந்து சீமானின் நா.த.கட்சிக்குத் தாவியவர், சந்தனக் கடத்தல்காரன் வீரப்பனின் மகள் வித்யாராணி. கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிருவாகி முரளிதர் ராவ் தலைமையில் வித்யா அக்கட்சியில் இணைந்தார்.
ஓராண்டுக்கு முன்னர் சீமானின் கட்சியில் சேர்ந்த அவர், கடந்த மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளராகவும் போட்டியிட்டார்.
சீமான் மீதான பாலியல் புகார் கடும் சர்ச்சையாக இருந்த நிலையில், கிருஷ்ணகிரியில் அவர் பேட்டியளித்தபோது உடனிருந்தவர்களில் வித்யாவும் ஒருவர்.
பின்னர், சீமானிடம் பாலியல் முறைகேட்டுப் புகாரை காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, அந்த இடத்தில் அழுது ஆர்ப்பாட்டம் செய்து பெரும் கவனத்தை ஈர்த்தார், வித்யாராணி.
இந்த நிலையில் நா.த.க.வில் அவருக்கு இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியை சீமான் வழங்கியுள்ளார்.