வெளிநாட்டில் முதல்வர்: மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!
தலைமை செயலகம்

வெளிநாட்டில் முதல்வர்: மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், தமிழகத்தில் மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்தவும், நலத்திட்டப் பணிகளை கண்காணிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

பல மாவட்டங்களில் ஏற்கெனவே பொறுப்பு அமைச்சர்கள் இருந்து வரும் நிலையில் தற்போது அவர்களின் மாவட்ட பொறுப்புகளில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த ஆர்.காந்தி திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாகை, மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த மெய்யநாதன் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவைக்கு செந்தில் பாலாஜி, கிருஷ்ணகிரிக்கு சக்கரபாணி, பெரம்பலூருக்கு சிவசங்கர், தஞ்சாவூருக்கு அன்பின் மகேஷ், நாகைக்கு ரகுபதி, சேலத்திற்கு கே என் நேரு, தேனிக்கு ஐ பெரியசாமி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சிக்கு  ஏ.வா.வேலு, தர்மபுரிக்கு எம் ஆர் கே பன்னீர்செல்வம், ராமநாதபுரத்துக்கு தங்கம் தென்னரசு, காஞ்சிபுரத்திற்கு தா. மோ. அன்பரசன், திருநெல்வேலிக்கு ராஜ கண்ணப்பன் ஆகிய அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள்கள் புழக்கம், சட்டம்-ஒழங்கு சீர்கேடு, மின்வெட்டு, கள்ளச்சாராய மரணங்கள் போன்றவை தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்க, புதிதாக நியமிக்கபட்டுள்ள பொறுப்பு அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்று காத்திருந்து பார்ப்போம்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com