செய்திகள்
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழ்நாட்டுக்காரர்களுக்கு அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக பன்னாட்டு திறன் மேம்பாட்டு நிறுவனம் ஒன்று புதியதாக அமைக்கப்படும்.
சிறுபான்மையினர் - அயலகத் தமிழர் நலன் துறை அமைச்சர் நாசர் சட்டப்பேரவையில் இன்று துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் இதுபற்றிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்களில் கற்றல் வசதியை மேம்படுத்தவும் இடைநிற்றலைத் தடுக்கவும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் படிப்பகங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில், 25 முகாம்களில் இந்தப் படிப்பகங்கள் அமைக்கப்படவுள்ளன.
அயலகத் தமிழர் மருத்துவச் சுற்றுலா
பன்னாட்டு திறன்மேம்பாட்டு அமைப்பு
25 இலங்கைத் தமிழர் முகாம்களில் படிப்பகங்கள்