வேங்கைவயல்- சிபிசிஐடி வாதம் ஏற்பு, கனகராஜின் மனு தள்ளுபடி!

வேங்கைவயல்
வேங்கைவயல்
Published on

பரபரப்பைக் கிளப்பிய வேங்கைவயல் தண்ணீர்த் தொட்டி விவகாரத்தில் சிபிசிஐடி காவல்துறையினரின் வாதத்தை புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்ட நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. 

இதில், சில நாள்களுக்கு முன்னர் சி.பி.சி.ஐ.டி. தாக்கல்செய்த மனுவில், மூன்று பேர் மீது குற்றச்சாட்டுக்கு அறிவியல்பூர்வ ஆதாரம் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது, அதிர்ச்சியைக் கிளப்பியது. 

அதையடுத்து, நேற்றுமுன்தினம் காவல்துறை சார்பில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதத்தில், தண்ணீர்த் தொட்டியில் மலம் கழிக்கப்பட்ட புகாரை மறுக்கும்படியாக, தண்ணீர் குடித்தவர்கள் குடித்தது நல்ல தண்ணீர்தான் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், அரசுத் தரப்பின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.   

குடிநீரால் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் கனகராஜ் தாக்கல்செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com