ஸ்டாலின்தான் இனி பல்கலை. வேந்தரா?- வக்கீல் வில்சன் விளக்கம்!

ஸ்டாலின்தான் இனி பல்கலை. வேந்தரா?- வக்கீல் வில்சன் விளக்கம்!
Published on

ஆளுநர் இரவியின் அத்துமீறல்கள் குறித்து உச்சநீதிமன்றம் இன்று கடுமையாகச் சாடியதுடன், அவர் சட்டவிரோதமாக நடந்துகொண்டதாகவும் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் முக்கிய பங்காற்றிய தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்குரைஞருமான வில்சன், தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து மகிழ்ச்சி தெரிவித்தார். 

பின்னர் அவர் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறியது: 

” இந்தியாவில் முதல்முறையாக ஒரு லேண்ட்மார்க் ஜட்ஜ்மென்ட் உச்சநீதிமன்றம் இன்றைக்கு தமிழக அரசு, கவர்னர் மீது தாக்கல் செய்த வழக்கில் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த லேண்ட்மார்க் ஜட்ஜ்மெண்ட் பிரகாரம் இனி கவர்னர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அவர்கள் சட்டசபையில் பாஸ் செய்து அனுப்பிய அந்த மசோதாவை assent கொடுக்கவேண்டும். ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு அமைச்சரவையில் முடிவெடுக்கும் அந்த அறிவுரையின் பிரகாரம் நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஒரு சட்டசபை மசோதாவை ஏற்றி அனுப்பி வைக்கும் பொழுது அதை ஆளுநர்கள் காலம் தாழ்த்தக் கூடாது என்றும், அவர்கள் உடனடியாக இந்த மசோதாக்களை ஒரு மாதத்திற்குள் அவர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்றும் ஒரு தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள். அதாவது, இந்த வழக்கில் என்னவென்று பார்த்தால், ஒரு பத்து மசோதாக்கள் பல்வேறு காலக்கட்டங்களில் ஏற்றுக்கொண்டு அனுப்பப்பட்டு அந்த மசோதாக்கள் மீது ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலந்தாழ்த்தி வந்தார். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அவருடைய அறிவுரையின் பேரில் இந்த வழக்கு தாக்கல் செய்தோம். அந்த பத்து மசோதாக்கள் என்ன மசோதாக்கள் என்றால், பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆளுநர் வேந்தராக (Chancellor) இருக்கிறார். அந்த வேந்தர் என்ற பதவியில் உட்கார்ந்து கொண்டு, அந்த பல்கலைகழகத்திற்கு Vice-chancellor உட்பட எல்லா நடவடிக்கைகளும் அவர் தடுத்துக் கொண்டு வந்தார். ஆகவே, அந்த வேந்தர் பதவியில் நீடிக்கக் கூடாது. அவரை வெளியேற்றி, அதற்கு பதிலாக மாநில அரசு அவர்கள் Nominate செய்கின்றவர்கள் வேந்தராக இருக்கவேண்டும் என்ற மசோதாக்களை ஏற்றி அனுப்பி காலந்தாழ்த்தி வந்ததால், இந்த வழக்கு தொடரப்பட்டது.

அதோடு மட்டுமில்லாமல், Remission of sentences அந்த கைதிகள் கோப்புகள் (Files) அனுப்பப்பட்டு, அந்த கோப்புகளிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலந்தாழ்த்தி வந்தது. அது மட்டுமில்லாமல், தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அப்பாயின்மென்ட்ஸ் உட்பட எந்த ஒரு ஃபைல் அனுப்பினாலும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் காலந்தாழ்த்தி வந்ததால், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்றைக்கு நான் சொன்ன பிரகாரம் ஒரு லேண்ட் மார்க் ஜட்ஜ்மெண்ட் கொடுத்திருக்கிறார்கள். அந்த ஜட்ஜ்மெண்ட் என்ன சொல்லியிருக்கிறது என்றால், இந்த பத்து மசோதாக்கள் 2023 வழக்கை தாக்கல் செய்வதற்கு முன்னாடியே இரண்டு ஆண்டு காலமாக இருந்ததால், இந்த மசோதாக்கள் ஏற்றி அனுப்பி நிலுவையில் உள்ளதால், உச்சநீதிமன்றமே இதற்கு ஒப்புதல் அளித்து, ஆளுநர் கூட அளிக்கத் தேவையில்லை - உச்சநீதிமன்றமே இந்த பத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து, அந்த பத்து மசோதாக்களும் இன்று முதல் நடைமுறைக்கு வரும்படியாக உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இனிவரும் காலங்களில் ஆளுநர்கள் எந்த ஒரு மசோதாக்களையும், முதலமைச்சர் உட்பட அமைச்சரவை கூட்டம் aid and advise பிரகாரம் தான் நடந்து கொள்ள வேண்டும். அதை மீறி நடந்து கொள்ளக் கூடாது என்றும் இந்த உத்தரவில் சொல்லியிருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த காலகட்டத்தில் ஒரு ஆளுநர் ஜனாதிபதிக்கு ஒரு மசோதாவை அனுப்பி வைக்கலாம் என்று இந்த வழக்கில் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். அதன் பிரகாரம் ஒரு நான்கு, ஐந்து பிரிவுகளில் எங்கெல்லாம் ஜனாதிபதி ஒப்புதல் தேவைப்படுகிறதோ, அந்த காலகட்டத்தில் தான் நீங்கள் ஒரு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்று இந்த வழக்கில் சொல்லி இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல், கால நிர்ணயம் செய்திருக்கிறார்கள். ஒரு மசோதா ஆளுநருக்கு வந்துவிட்டால் அந்த மசோதா 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வழக்கு தீர்ப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவெடுக்கும் பட்சத்தில், மூன்று மாதத்திற்குள் நீங்கள் அனுப்பி வைக்கலாம் என்றும் சொல்லி இருக்கிறார்கள். ஆகவே, இந்த வழக்கின் தீர்ப்பானது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாகும். இந்த வழக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் நலன் கருதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது ஒரு வரவேற்கத்தக்க விஷயம் ஆகும். எங்கள் முதலமைச்சர் இந்த வழக்கின் மூலம் இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களின் சுய ஆட்சியை நிலைநாட்டி இருக்கிறார். அந்த வழக்கின் மூலமாக democratically elected governments இனிமேல் Constitution பிரகாரம் அவர்கள் செயல்பட்டு கவர்னர்கள் இடையூறாக இருந்தால், நீதிமன்றத்தை அணுகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை பெற்றிருக்கிறார். இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களுக்கும் இது பொருந்தும். ஆகவே, இது பெரிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. இனிவரும் காலங்களில், கவர்னர் காலம் தாழ்த்த முடியாது. அந்த வழக்கில் நீதிமன்றம் கவர்னருக்கு என்னவெல்லாம் அட்வைஸ் வழங்கியிருக்கிறது என்றால், ஒரு கவர்னர் நண்பராக இருக்கவேண்டும் - ஒரு philosopher-ஆக இருக்க வேண்டும் – ஒரு கைடாக இருக்கவேண்டும் – ஒரு அட்வைசராக இருக்கவேண்டும் - நீங்கள் Road blocks போடுவது போல நடந்து கொள்ளக் கூடாது என்று நிறைய அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். இந்த தீர்ப்பு தமிழக கவர்னருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள அத்தனை கவர்னருக்கும் இது பொருந்தும்.” என்று வில்சன் கூறினார். 

பின்னர் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.  

அதன் விவரம்:

“ கேள்வி - இதற்கு முன்பு ஆளுநர் அவர்கள் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்த நிலையில், தற்போது இந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசே வேந்தரை நியமிக்குமா? அது பற்றி….

பதில் - இந்தப் பத்து மசோதாக்களில் ஆளுநர் பல்கலைக்கழகங்களுக்கு  வேந்தராக இருப்பதை நீக்கம் செய்வதற்காக தான் இந்த வழக்கு இயற்றப்பட்டது. இந்த மசோதாக்கள் தீர்ப்பின் பிரகாரம் Governor Deemed to Granted of assents என்று உச்ச நீதிமன்றமே ஒரு தீர்ப்பை கொடுத்ததால், இன்றிலிருந்து அவர் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த பில்லில் யாரை குறிப்பிட்டு இருக்கிறார்களோ தமிழ்நாடு அரசு nominate செய்கிறார்களோ அவர்கள் தான் வேந்தராக இருக்க முடியும்.

கேள்வி – ஆளுநர் review petition போடுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

பதில் - இன்றைய தேதியில் நீதிமன்றத்தில் அட்டார்னி ஜெனரல் சொன்னார்கள். ஆனால், தீர்ப்பு பகரப்பட்டுள்ளது. இனி மேல் நடவடிக்கை அவர்கள் எந்த பெட்டிஷன் போட்டாலும் அதை எதிர்த்து நாங்கள் வாதாடுவோம்.

கேள்வி – நீட் சம்பந்தமாக….

பதில் - நீட்டிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இந்த வழக்கில், ஒரு ஆளுநர் சட்டத்திற்கு எதிராக அல்லது ஒரு அமைச்சரவையின் அட்வைஸுக்கு எதிராக அவர் ஒப்புதலை நிறுத்தி வைத்தால், அவருக்கு மூன்று வழி தான் உள்ளது. அதை நிறுத்தி வைத்து அவர் மீண்டும் அதை சட்டமன்றத்திற்கு தான் அனுப்ப வேண்டும். ஒன்று அவர் பில்லை பாஸ் செய்யலாம். இல்லையென்றால், அந்த பில்லை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கலாம் -மூன்றாவது Withhheld என்றால் அது மீண்டும் சட்டசபைக்கு வந்து விடும் - சட்டசபை இரண்டாவது முறையாக அதை ஏற்றி அனுப்பப்படும் போது ஆளுநருக்கு எந்தவித ஆப்ஷன் கிடையாது. இந்த வழக்கில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால், பி.கே.பவித்ரா வழக்கை, தவறான தீர்ப்பு என்று சொல்லி, அதை over rule என்று சொல்லி இரண்டாவது முறையாக ஒரு சட்டசபை அதே மசோதாவை ஏற்றி அனுப்பினால், ஆளுநருக்கு எந்தவித ஆப்ஷனும் இல்லை. அவர் நிச்சயமாக அதற்கு assent கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். எப்போது ஒரு ஆளுநர் ஒரு பில்லை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் என்றால் முதன்முறையாக அவருக்கு வரும்போது, அந்த நேரத்தில் அவர் அந்த ஆப்ஷனை உபயோகப்படுத்தி குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் - குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதும் rights கிடையாது. அதற்கும் ஒரு வரையறுத்திருக்கிறார்கள் - இந்த சூழ்நிலையில் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் என்று கூறி இருக்கிறார்கள் - குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுக்கக்கூடிய மசோதாக்களுக்கு fundamental rights affect ஆகக்கூடிய மசோதாக்களை நீங்கள் முதல் முறையாகவோ அல்லது இரண்டாவது முறையாகவோ வரும்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் என்று இந்த வழக்கில் தீர்ப்பாக சொல்லி இருக்கிறார்கள்.

கேள்வி – அந்த definition-ல் நீட் exemption பில் வராதா? அது பற்றி….

பதில் -  Neet exemption Bill குடியரசுத் தலைவர் withheld செய்து அதற்கு ஒப்புதல் அளிக்காததால் இந்த வழக்கின் தீர்ப்பின்படி, அதை நீதிமன்றத்தில் சேலஞ்ச் செய்யலாம் என்று இந்த வழக்கில் நீட் சம்பந்தமாக சொல்லவில்லை என்றாலும், இவர்கள் lay செய்திருக்கும் அந்த rulings பிரகாரம் பார்த்தால், நீட் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது கூட நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்று தீர்ப்பில் தெள்ளத்தெளிவாக ஒரு law lay down செய்திருக்கிறார்கள்.

முதலமைச்சருடைய அறிவுரையின் பேரில், அதை நேற்றைக்கு நாங்கள் தாக்கல் செய்து விட்டோம். அதை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். வருகிற திங்கட்கிழமை அன்று விசாரணைக்கு வர வாய்ப்புகள் உள்ளது. என்றைக்கு வரும் என்று தெரியவில்லை. உச்சநீதிமன்றம் என்ன தேதி சொல்கிறார்களோ அதன் பிரகாரம் தெரிய வரும்.” என்று வில்சன் கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com