ஸ்ரீவைகுண்டம் மாணவனைப் பார்வையிட்ட திருமா!

ஸ்ரீவைகுண்டம் மாணவனைப் பார்வையிட்ட திருமா!
Published on

சக மாணவர்களால் சாதியத் தாக்குதலுக்கு ஆளான திருவைகுண்டம் பள்ளி மாணவனை நெல்லை மருத்துவமனையில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் நேரில் பார்த்து நலம்விசாரித்தார். 

வி.சி.க. சார்பில் இரண்டு லட்சம் ரூபாய் உதவி நிதியையும் மாணவனின் பெற்றோரிடம் அவர் வழங்கினார்.  

இதுகுறித்து திருமாவளவன் தன் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டிருக்கும் தகவல்:

”சாதி வெறியர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் தேவேந்திர ராஜை இன்று சந்தித்தேன். அவரின் பெற்றோர் தங்ககணேஷ், மாலதிக்கு ஆறுதல் கூறினேன்.  திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி - மருத்துவமனை தலைவர் ரேவதி பாலனைச் சந்தித்து தேவேந்திரராஜின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். தீவிரமான சிறப்பான சிகிச்சை அளித்து தேவேந்திரர ராஜைக் காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன்.” என்று திருமாவளவன் அதில் தெரிவித்துள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com