செய்திகள்
முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கூறப்படும் புனித ஹஜ் பயணத்தில் இந்தியப் பயணிகளின் எண்ணிக்கையைக் குறைத்திருப்பதாகத் தகவல் வெளியாயுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் சமூக ஊடகப் பக்கத்தில் மைய அரசுக்குக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதில், ” இந்தியாவில் இருந்து தனியார் நிறுவனங்கள் மூலமாக ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான ஒதுக்கீடு திடீரெனக் குறைக்கப்பட்டிருப்பது பல்லாயிரக்கணக்கானோரைப் பரிதவிப்பில் ஆழ்த்தியுள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக சவுதி அரசுடன் பேசி, இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துக்கிறேன்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.